மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ? - Swiggy, Zomato, Big Basket நிறுவனங்கள் ஆலோசிப்பதாக தகவல் !மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ? - Swiggy, Zomato, Big Basket நிறுவனங்கள் ஆலோசிப்பதாக தகவல் !

தற்போது இந்தியாவில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ? புகழ்பெற்ற உணவு டெலிவரி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது Swiggy, Zomato, Big Basket போன்ற நிறுவனங்கள்.

மேலும் இவை பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்த படியே புடித்த உணவகங்களில் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதில் உணவு டெலிவரி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்துடன் இந்நிறுவனங்கள் உணவு கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துக்கொள்கின்றன. இதனை தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தற்போது பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஓன்லைன் ஆர்டர் மூலம் பொதுமக்களுக்கு ஹோம் டெலிவிரி செய்யும் வசதியை அமல்படுத்த Swiggy, Zomato, Big Basket உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் –  ZOMATO மற்றும் SWIGGY கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

இதனை தொடர்ந்து ஒடிசா, மேற்குவங்கத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ள நிலையில், தற்போது மற்ற முக்கிய மாநிலங்களான கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசிடம் இருந்து அனுமதி பெற்று மதுபான ஹோம் டெலிவிரி திட்டத்தை நடைமுறை படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *