அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !

தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரபதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில், இன்று காலை கேராளவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து போலி சான்றிதழ் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், அத்துடன் தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் முன்ஜாமின் வழங்கக்கோரி விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இதனை விசாரித்த நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ? – Swiggy, Zomato, Big Basket நிறுவனங்கள் ஆலோசிப்பதாக தகவல் !

இதனையடுத்து தனிப்படை அமைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *