தமிழ்நாட்டில்  வெளுத்து வாங்க போகும் கனமழை - சென்னை வாசிகள் அலெர்ட்டா இருந்துகோங்க?தமிழ்நாட்டில்  வெளுத்து வாங்க போகும் கனமழை - சென்னை வாசிகள் அலெர்ட்டா இருந்துகோங்க?

தமிழ்நாட்டில்  வெளுத்து வாங்க போகும் கனமழை: தமிழ்நாட்டில் இதுவரை பதிவாகாத கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சில முக்கிய பகுதிகளில் கனமழை பெய்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 4 பகுதிகளில் மிக மிக கன மழையும், 5 இடங்களில் மிக கன மழையும் பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது.

அதன்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் 37 செ.மீ, வால்பாறை பகுதியில் 25 செ.மீ, அப்பர் பவானி பகுதியில் 25 செ.மீ, சின்னக்கல்லாரில் பகுதிகளில் 23 செ.மீ என மிக மிக கனமழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு – எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு ரூபாய்? முழு விவரம் உள்ளே!

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டுக்கான தென்மேற்கு பருவமழை சராசரி அளவைவிட கூடுதலாக பெய்துள்ளது. தெளிவாக சொல்ல போனால், 120 நாட்களில் பெய்ய கூடிய கனமழை வெறும் 40 நாட்களிலே பெய்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு வாரத்திற்கு மிதமான கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *