Breaking News: கேரளா அரசு மருத்துவமனை லிப்டில் 2 நாட்கள் சிக்கிய முதியவர்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தான் ரவீந்திரன் நாயர்(59). இவர் கடந்த சனிக்கிழமை அன்று அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவர் நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால், அந்த கல்லூரியில் உள்ள லிப்ட்டில் ஏறியுள்ளார்.
கேரளா அரசு மருத்துவமனை
அப்போது முதல் தளம் வந்த நிலையில், லிப்ட் கதவு திறக்கவில்லை. அதனால் பதறி போன அவர், தன்னை காப்பாற்றுமாறு உதவிக்காக கூச்சலிட்டு உள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அவர் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. மேலும் துரதிர்ஷ்டவசமாக அவருடைய மொபைலும் switch off ஆனதால் குடும்பத்தினர் பதறி போகினர். மேலும் தொடர்ந்து இரண்டு நாட்கள் லிப்ட் குள்ளேயே இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக சென்ற ரவீந்திரன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் நேற்று இரவு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு இன்று காலை லிப்ட் ஆப்ரேட்டர் வேலைக்காக லிப்டை திறந்துள்ளார்.
Also Read: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு – எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு ரூபாய்? முழு விவரம் உள்ளே!
அப்போது அந்த முதியவர் மயங்கி விழுந்தது கிடந்ததை பார்த்த அந்த ஆப்ரேட்டர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அங்கிருந்த மருத்துவர்கள் மீட்டு சிகிச்சை கொடுத்து மீட்டனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்து வரும் நிலையில், LIFT ஆப்ரேட்டர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. kerala news – government hospital – lift – old man
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ?
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்