வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடர் கேப்டன் பதவியிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இலங்கை டி20 தொடர் :
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் உலகக்கோப்பையை வெற்றி பெற முடிந்ததாக அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது சொந்த காரணங்களுக்காக பாண்டியா ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றும், டி20 தொடரில் கேப்டனாக செய்யப்படுவர் என்று பிசிசிஐ சீனியர் குழு அறிவித்திருந்தது.
சூரியகுமார் யாதவ் தேர்வு :
அந்த வகையில் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு சூரியகுமார் யாதவை பிசிசிஐ தேர்வு குழுவும், தலைமை பயிற்ச்சியாளர் கவுதம் கம்பிரும் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்த ஏத்தர் நிறுவனம் – அப்படி என்ன விசேஷம் இருக்கு தெரியுமா?
இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் 30ம் தேதி வரையும் ஒருநாள் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 2ம் தேதிமுதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது