Home » செய்திகள் » கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – மக்கள் அவதி!

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – மக்கள் அவதி!

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? - மக்கள் அவதி!

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை: தமிழகம் உட்பட சில முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு அதிகமாக விளைய கூடிய தக்காளியின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு, தற்போது அதன் வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

இதனால் இப்பொழுது மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது கடந்த மாதம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி  ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 100 யையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து கொஞ்சம் குறைந்து காணப்பட்டது. தற்போது தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் மீண்டும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது.

Also Read: வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய விலை நிலவரம்!

அதேபோல் வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.90 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பச்சை மிளகாய் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

நேற்று முன் தினம் வரை ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்ட நிலையில், நேற்று முதல் ஒரு கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை அதிகரித்து, ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் சற்று கலக்கத்தில் இருந்து வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top