புதிய ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக் அறிமுகம் - அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு தகவல் இதோ !புதிய ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக் அறிமுகம் - அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு தகவல் இதோ !

தற்போது புதிய ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் விரும்பும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் பல புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்து வருகிறது.

அத்துடன் கெரில்லா 450 ஹிமாலயன் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்றும் குறைந்த அம்சங்கள், வெவ்வேறு சுழற்சி பாகங்கள் மற்றும் சாலை சார்ந்த டயர்கள் போன்றவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது ஹிமாலயன் பைக் 450க்கான விலைகள் ₹ 2.85 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.

இதனையடுத்து ஹிமாலயன் மற்றும் கெரில்லா 450 க்கு இடையே சுமார் ₹ 50,000 ரூபாய் இடைவெளி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் கெரில்லா 450 விலை சுமார் ₹ 2.35 லட்சம் முதல் ₹ 2.4 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் எனத் தெரிகிறது.

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த விலையில் கெரில்லா 450 யானது, ட்ரையம்ப் ஸ்பீட் 400, ஹீரோ மேவ்ரிக் 440, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, பஜாஜ் டோமினார், பஜாஜ் பல்சர் என்எஸ் 400 இசட் மற்றும் கேடிஎம் 390 டியூக் போன்றவற்றுக்கு எதிராக உயரும்.

கெரில்லா 450 யானது ஷெர்பா 452 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சினை கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி 8,000 ஆர்பிஎம்மில் 39.5 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் ஆற்றலை உருவாக்க கூடிய அமைப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். மேலும் கெரில்லாவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு நவீன ரெட்ரோ ரோட்ஸ்டரின் வடிவமைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – கேப்டன் பதவியிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா – புதிய கேப்டன் யார் தெரியுமா ?

அத்துடன் இதில் வட்டமான எல்இடி ஹெட்லைட், சாலை சார்புடைய ரப்பருடன் கூடிய 17 இன்ச் அலாய்ஸ் ஷோட், டாப்-ஸ்பெக் வேரியண்டில் டிரிப்பர் டேஷ் மற்றும் சிங்கிள் பீஸ் சீட் ஆகியவற்றைப் பெறும் என்றும், கெரில்லா 450 ஹிமாலயநாய் விட இலகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் புதிய கெரில்லா 450 பல புதிய வண்ணங்களில் இதுவரை பார்த்திராத கலவையுடன் கிடைக்கும் என்றும்,

அதன் பின்னர் வரும் ஜூலை 17, 2024 அன்று மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்படும் என்பதால் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *