விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு: தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான எல்லா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.  அவரின் பெயரில் வெற்றி என்ற வார்த்தை இருக்கிறதாலோ என்னவோ தெரியவில்லை.

தொட்ட எல்லாத்திலும் அவருக்கு வெற்றி கிடைத்து வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் வெளியான “விடுதலை” திரைப்படம் பெரிய அளவுக்கு பேசப்பட்டது. இதனை தொடர்ந்து விடுதலை 2 எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே  வெற்றி மாறன் படைப்பில் உருவான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் விடுதலை 2 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

Also Read: சர்தார் 2 ஷூட்டிங் போது உயிரிழந்த முக்கிய பிரபலம் – படப்பிடிப்பில் என்ன நடந்தது?

அதன்படி தற்போது வெளியான போஸ்டரில் மஞ்சுவுடன் விஜய் சேதுபதி கொஞ்சி குலாவும் புகைப்படம் தான் வெளியாகி உள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது செகண்ட் பார்ட்டில் விஜய் சேதுபதி மஞ்சு வாரியாருக்கு இடையே உள்ள காதலை மையமாக வைத்து தான் படம் நகரும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அதற்கு பக்கத்தில் விஜய் சேதுபதி கத்தி எடுத்து ஓடுவது போல் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி “உயிர்ப்ப ஊரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்” என்ற குரல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த குரல் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *