Breaking News: OLA நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த நபர்: இந்தியாவின் முக்கிய நிறுவனமாக இயங்கி வரும் OLA நிறுவனம் தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெரும்பாலான மக்கள் வாங்கி மகிழ்ந்தனர்.
OLA நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த நபர்
அந்த வகையில் கடந்த 2023 டிசம்பரில் நிஷாத் என்பவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ₹1.62 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கொஞ்ச நாட்களில் அவருடைய ஸ்கூட்டரின் பாகங்கள் இயங்காமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன நிஷாத் ஷோரூமில் போய் புகாரளித்துள்ளார்.
ஆனால் அந்த ஷோரூம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நிஷாத் நீதிமன்றத்தை நாடி இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
Also Read: மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்கூட்டருக்கான விலையை (₹1.62 லட்சம்) 6% வட்டியுடனும், வழக்கு செலவுக்கு ₹10,000, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு ₹20,000மும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வழக்கு தொடர்ந்த நிஷாத் என்பவருக்கு மொத்தம் ₹1.94 லட்சம் வழங்குமாறு OLA நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ?
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்