பிரபல நடிகையை திடீரென சந்தித்த தளபதி விஜய் - ஒரு வேலை இருக்குமோ? - போட்டோ வைரல்!!பிரபல நடிகையை திடீரென சந்தித்த தளபதி விஜய் - ஒரு வேலை இருக்குமோ? - போட்டோ வைரல்!!

Kollywood King: பிரபல நடிகையை திடீரென சந்தித்த தளபதி விஜய்: கோலிவுட்டை கலக்கி வரும் நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் அவர் அரசியல் பக்கம் செல்ல இருப்பதால் அவரின் கடைசி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளில் படு பிஸியாக இருந்து வருகிறார் விஜய்.

ஏன் சமீபத்தில் கூட 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய் லேட்டஸ்ட் க்ளிக் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்னர் விஜய்யுடன் சேர்ந்து ஹிட் படங்களை கொடுத்த நடிகை ரம்பா குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

Also Read: விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் அவர்களுடன் சேர்ந்து விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த திடீர் சந்திப்பு எதற்கு என்று ரசிகர்கள் பலரும் குழம்பி போய் உள்ளனர்.

மேலும் சிலர் விஜய்யின் அடுத்த படத்தில் ரம்பா நடிக்க வாய்ப்பு இருக்கா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *