டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் - முழு தகவல் இதோ !டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் - முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) சார்பில் குரூப் II மற்றும் IIA ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC- GROUP-II AND IIA Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

அத்துடன் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி – II சார்பில் 507 காலிப்பணியிடங்களும், தொகுதி IIA விற்கு 1,820 காலிப்பணியிடங்களும்,

மொத்தமாக (TNPSC-GROUP-II &IIA ) 2327 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக 20.06.2024 அன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு ஆகும்.

TNPSC தொகுதி -II மற்றும் IIA -ற்கான முதல் நிலைதேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்,

சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வரும் 18-07-2024 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளன.

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை – சட்ட வரைவு மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் !

இதனையடுத்து இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள,

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலைநாட்களில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *