ரேஷன் கடையில் விற்பனை செய்ய பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு. தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் கொடுத்து வருகிறது. அதன் படி தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடிக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடை பொருட்கள் மூலம் பயணடைந்து வருகின்றனர். Breaking News 18.07.2024.
பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு
அதுமட்டுமின்றி சமயலுக்கு அதிகம் தேவைப்படும் துவரம் பருப்பு, எண்ணெய்யை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள். அதன்படி துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.25 -க்கும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த இரண்டு பொருட்களும் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மேற்கண்ட விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வரத்து குறைவாக இருப்பதால் கடையில் கிடைக்கவில்லை என்று மக்கள் புலம்பி வந்தனர். மேலும் இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !
அதாவது, ஏழை மக்களுக்கு அடுத்த இரண்டு மாதத்திற்கு தேவையான 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரி இருக்கிறது.மேலும் இனிமேல் பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்ய நிறுத்தப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே விரைவாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அதை பொதுமக்களுக்கு வேகமாக விநியோகம் செய்யும் வகையில் தற்போது குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் நியாய விலைகடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். Tamil Online News