தற்போது பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை, அத்துடன் ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வணிக வளாகத்திற்கு சீல் :
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஜி.டி வணிகவளாகம் அமைந்துள்ளது. அண்மையில் இந்த வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு உள்ளே செல்ல காவலாளிகள் அனுமதி மறுத்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதனை கண்டித்து கன்னட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
கர்நாடகா அரசு நடவடிக்கை :
வேட்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே செல்ல அனுமதி மறுத்த ஜி.டி வணிகவளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ரூ.1.78 கோடி வரி செலுத்தாத காரணத்தால் தற்போது பெங்களூருவில் உள்ள ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீட் முறைகேடு எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை – அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சீல் சிபிஐ அதிரடி!!
அந்த வகையில் வேட்டி அணிந்து வந்த விவசாயியை வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்காத விவகாரம் பேசுபொருளான நிலையில் கர்நாடக மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.