Breaking News: கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி: தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கனத்த மழை அப்பகுதியில் பொழிந்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரம் இருக்கும் மாவட்டங்களிலும் ஆறுகள் உள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி
இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே போல் நீர் நிலையங்களிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹாவேரி மாவட்டத்தில் தற்போது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஹாவேரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் பகுதியில் வாழும் மக்களின் வீட்டு சுவர்கள் ஈரப்பதம் படர்ந்து காணப்பட்டது. அந்த வகையில் ஹாவேரி மாவட்டம், மாதப்பூர் என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் சன்னம்மா தொட்டபசப்பா ஹரகுனி (35) என்பவர் தனது 2 குழந்தைகளுடன் இரவு நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.
Also Read: வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!
இரவு பகல் பார்க்காமல் பேய் மழை பெய்த காரணத்தால் சன்னம்மா தொட்டபசப்பா ஹரகுனி வீட்டின் சுவர் ஈரப்பதம் அடைந்த நிலையில் திடீரென சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த அம்மா குழந்தைகள் மீது விழுந்தது.
இதில் 2 குழந்தைகள் உட்பட தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம்
கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் தங்கம் விலை