Breaking News: ராஜஸ்தானில் வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று: ராஜஸ்தான் மாநிலம் மச்சானி என்ற கிராமத்தில் கரவுளியில் எருமை மாடு ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்னவென்றால் அந்த எருமை மாடு வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. அதுமட்டுமின்றி அந்த குட்டி எருமையோ மாட்டின் உடலில் சிறிதளவு கூட கருப்பு நிறமோ, அல்லது வேறு எந்த நிறமோ காணப்படவில்லை.
ராஜஸ்தானில் வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று
இந்த குட்டி பிறந்த செய்தி வேகமாக அக்கம் பக்கம் பரவிய நிலையில், கன்று குட்டியை பார்க்க மக்கள் கூட்டம் தற்போது வந்து ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு திரும்பிச் செல்கின்றனர். இது குறித்து அந்த எருமை மாட்டின் ஓனர் நீரஜ் ராஜ்புத் பேசியாவது, ” இந்த நாட்டு இன எருமை மாடு இப்பொழுது தான் வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை நிறத்தில் குட்டியை ஈன்றுள்ளது.
தற்போது கன்றுக் குட்டி ஆரோக்கியமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி தாய் எருமை மாடு தனது குட்டியை மிகவும் அரவணைத்துப் பார்த்துக் கொள்கிறது என்று ஓனர் நீரஜ் ராஜ்புத் கூறியுள்ளார். மேலும் எப்படி இந்த அதிசயமான சம்பவம் நடைபெற்றது என்று பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.
Also Read: கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து – மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு!
இதுகுறித்து கால்நடை மருத்துவர் பிரம்ம பிரகாஷ் பாண்டே பேசுகையில், ” அல்பினிசம் என்ற மரபணு கோளாறு காரணமாக தான் எருமை கன்றுக்குட்டி வெள்ளையாக பிறந்துள்ளது.
பொதுவாக மரபணு கோளாறு ஏற்பட்டால் உடலின் ஒரு சில பகுதியில் தான் மாற்றம் ஏற்படும்.
ஆனால் உடல் முழுவதும் முற்றிலும் நிறமற்றதாக இருப்பது மிகவும் அரிதானது என்று கால்நடை மருத்துவர் பிரம்ம பிரகாஷ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி
வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்
பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல்
இந்தியாவில் வீரியமெடுக்கும் சண்டிபுரா வைரஸ்