Breaking News: சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவைகள் பாதிப்பு: உலகில் விண்டோஸ் இணையதளம் இன்று மதியம் 12 மணியிலிருந்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை இல்லாததால் போர்டிங் பாஸ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவைகள் பாதிப்பு
இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பயணிகளுக்காக விமான நிறுவனங்கள் கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து போர்டிங் பாஸ்-களை கைகளால் எழுதிக் கொடுத்தனர்.
அதுமட்டுமின்றி சென்னையில் இருந்து மதுரை, திருவனந்தபுரம், கோயம்புத்தூர், மும்பை, பெங்களூரு, பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத் மற்றும் லக்னோ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: இலங்கைக்கு எதிரான T20 தொடர் – கேப்டன் யார் தெரியுமா? BCCI அறிவித்த இந்திய அணி வீரர்கள் பட்டியல்!!
அதுமட்டுமின்றி அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இணையதள கோளாறு சரி செய்யப்பட்டு விமானங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி
வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்
பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல்
கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து