மதுரை தத்தனேரி மயானத்தில் எரியூட்டும் பணி நிறுத்தம்: மதுரையில் முக்கியமான மயானம் என்றால் அது தத்தனேரி மயானம் தான். இங்கு எலக்ட்ரிக் சுடுகாடு இருக்கிறது. விறகு வைத்து எரிக்கும் இடுகாடும் உள்ளது. அதுமட்டுமின்றி அங்கு 5 எரியூட்டும் தகன மேடைகள் இருக்கிறது.
மதுரை தத்தனேரி மயானத்தில் எரியூட்டும் பணி நிறுத்தம்
இந்நிலையில் எரியூட்டும் தகன மேடைகள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மயானத்தில் எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிகள் சில மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இதனால் எரியூட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை மதுரை தத்தனேரி எரியூட்டும் தகன மேடைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
Also Read: மாணவர்களுக்கு 25 ஆயிரம் ஊக்கத்தொகை – எப்படி பெறுவது தெரியுமா? உடனே விண்ணப்பியுங்கள்!!
எனவே தகனம் செய்ய மக்கள் செல்லும் இதற்கு பதிலாக அப்பகுதி மக்கள் இயற்கை எரியூட்டும் தகன மயானங்களையும் மற்றும் கீரைத்துறை எரிவாயு தகன மேடையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி
வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்
பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல்
கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து