முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி - ICUவில் தீவிர சிகிச்சை -  ஜாமீன் கிடைக்குமா?முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி - ICUவில் தீவிர சிகிச்சை -  ஜாமீன் கிடைக்குமா?

Breaking News: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் இருந்து வந்த நிலையில், இதுவரை 40 க்கும் மேற்பட்ட முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைத்த பாடில்லை. தொடர்ந்து அவருடைய ஜாமீனை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருகிறது.

இந்நிலையில் அவர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்படி இருக்கையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. தற்போது செந்தில் பாலாஜி ஐ.சி.யூ வில் இருந்து வரும் நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

Also Read: தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம் – தொடர்ந்து அதிரடி காட்டும் தமிழக அரசு!

மேலும் மீண்டும் ஜாமீன் கேட்டும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடாக புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

எனவே அவரின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஜாமீன் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ex minister Senthil Balaji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *