RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் கிட்டத்தட்ட 58 வருடங்களாக அரசு ஊழியர்கள் கலந்து கொண்டதில்லை. இந்த சட்டம் கடந்த 1966ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பிரதமர் மோடியின் மத்திய அரசு, RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்று இருந்த தடையை நீக்கியுள்ளது. இதற்கான நகலை பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மாளவியா தனது இணையத்தில் பதிவேற்றியுள்ளார். congress – bjp
RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்
இதில் “58 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட “அரசியலமைப்புக்கு எதிரான” உத்தரவு மோடி அரசால் வாபஸ் பெறப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்பது அரசு விதி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. central government
Also Read: கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை – ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்கள்!!
அதை தான் தற்போது வரை மத்திய மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில் Follow செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது. இதை காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். rss movement
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா
தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது?
சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல்