நடந்து முடிந்த நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண் பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு :
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்று முடிவடைந்தது.
இதனைதொடர்ந்து நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தன.
அத்துடன் சில தேர்வு மையங்களில் வினாத்தாள் கசியவிடப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல மாநிலங்கள் குரல் எழுப்ப தொடங்கி விட்டனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய தேர்வு முகமை (என்டிஏ), நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் வாரியாக கடந்த சனிக் கிழமை வெளியிட்டது.
பூஜ்ஜியம் மதிப்பெண் :
அந்த வகையில் நீட் தேர்வில் கேள்விக்கு தவறாக விடையளிக்கும் மாணவர்களுக்கு நெகடிவ் மார்க் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாக நெகடிவ் மார்க்கை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறிப்பாக பிஹாரில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் மிகவும் குறைந்தபட்சமாக ஒரு மாணவர் மைனஸ் 180 மதிப்பெண்களை பெற்றுள்ளார். நீட் தேர்வில் ஒரு சரியான பதிலுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
அதேசமயம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மேலும் முயற்சிக்கப்படாத கேள்விகளுக்கு எந்தவித மதிப்பெண்ணும் குறைக்கப்படுவதோ அல்லது வழங்கப்படுவதோ இல்லை.
போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க – வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் !
உச்சநீதிமன்றம் விசாரணை :
இதனை தொடர்ந்து ஒன்றான ராஜஸ்தானின் சிகாரில் உள்ள பிரபல பயிற்சி மையங்களில் 2,000 பேர் 650 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.
மேலும் 4,000 பேர் 600 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றுள்ளனர். நீட் தேர்வை கடந்த மே மாதம் 5ம் தேதி 24 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
இந்த தேர்வில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.