Live Update: மத்திய பட்ஜெட் 2024 -2025: நாட்டில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் கிட்டத்தட்ட 7 காட்டன் கட்டங்களாக நடைபெற்ற நிலையில், வழக்கம் போல் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று 2024-25 ஆம் நிதியாண்டிற்கான முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய பட்ஜெட் 2024 -2025
அதன்படி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தன்னுடைய மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதில் பல திட்டங்களை முன்வைத்து வந்தார். அதில் முக்கியமான திட்டமாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% ஆக குறைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களை செய்ய தேவைப்படும் 25 முக்கியமான கனிமங்களான லித்தியம், கோபால்ட் மற்றும் தாமிரம் உள்ளிட்டவைகளுக்கு சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read: நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024 – 25 ! வேளாண்மைக்கு முக்கியத்துவம் – பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் !
எனவே தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிளாட்டினத்தின் மீதான சுங்க வரி 15. 4ல் இருந்து 6.4% ஆக குறைப்பதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இது போன்ற பல திட்டங்களை கூறிய அவர் மொத்தம் ஒரு மணி 24 நிமிடம் வரை பேசி தனது உரையை முடித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். india budget 2024-25
ராஜஸ்தான் அணியில் சேரும் ராகுல் டிராவிட்?
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம்
நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர்
பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு