CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்: IPL கிரிக்கெட் போட்டி என்று எடுத்துக் கொண்டால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.
தல தோனியின் தலைமையில் விளையாடிய இந்த அணி இதுவரை 6 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஐபிஎல் போட்டியில் CSK அணி கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார்.
அவருக்கு பதில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தார். இப்படி இருக்கையில் அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் தான் சிஎஸ்கே கேப்டன் என்று ரசிகர்கள் பலரும் நினைத்த நிலையில்,
கடந்த சில வாரங்களாக அவர் கேப்டன் இல்லை என்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் தீயாக பரவி வந்தது.
அதுமட்டுமின்றி அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் சேருவார் என தகவல்களும் வெளியாகின.
CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்
அப்படி ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக எம் எஸ் தோனி வர ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெற்று விடை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி 2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்க இருக்கிறது.
Also Read: மகளிர் ஆசிய கோப்பை 2024 – வரலாற்றில் முதல் வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்த சமாரி அத்தபத்து!!
எனவே ருதுராஜ் அனுபவமிக்க வீரர் என்பதால் அவரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி நிலவும். மேலும், கடந்த முறை தோனியே ருதுராஜ் கேப்டன்சியின் கீழ் விளையாடிய போது,
வேறு எந்த முக்கிய வீரர் சிஎஸ்கே அணியில் சேர்ந்தாலும் கூட , அவர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் தான் ஆட வேண்டும் என CSK நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.
எனவே கண்டிப்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் என்று அழைக்கப்படுகிறது.ms dhoni csk team