ஆடிப்பெருக்கு 2024 பதினெட்டாம் நாள்: ஆடி மாதம் என்றாலே அது ஆன்மீக மாதம் என்று பண்டைய காலத்தில் இருந்தே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் கடவுளுக்கு உகந்த மாதமும் கூட.
அப்படி பட்ட ஆடி மாதத்தில் விசேஷமான நாள் என்றால் (ஆடி 18) ஆடி பெருக்கு தான். அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அமாவாசை உயர்ந்ததாக போற்றப்படுகிறது.
ஆடிப்பெருக்கு 2024 பதினெட்டாம் நாள்
குறிப்பாக ஆடி பெருக்கு விழா காவிரி ஆற்றை சிறப்பிக்கும் வகையில் தொன்று தொட்டு இந்த விழா வெகு விமரிசையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி பதினெட்டாம் நாள் மக்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். குறிப்பாக ஆறுகளுக்கு சென்று நீராடி பூஜை செய்வது வழக்கம்.
ஆனால் இப்பொழுது எந்த நதிக் கரையிலும் தண்ணீர் இருப்பதில்லை எனவே நாம் வீட்டில் வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆடி பதினெட்டாம் நாளில் கல்யாணமான பெண்கள் தாலி கயிறை மாற்றுவதற்கு உகந்த நாளாகும். அதனால் மாங்கல்யம் நிலைக்க வேண்டும் விரும்பும் மனைவிமார்கள் புதிதாக தாலி கயிறு மாற்ற கூடும்.
எனவே உங்களுடைய பூஜை அறையை சுத்தமாக கிளீன் செய்ய வேண்டும். அப்புறம் ஒரு பெரிய வாழை இலையை விரித்து அதில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், பாக்கு, பூ, பழம் உள்ளிட்ட மங்கள பொருட்களை வைக்க வேண்டும்.
இதையடுத்து காப்பரிசி படையலிட்டு அதனுடன் சேர்த்து பழவகைகள் கடவுளுக்கு படைக்க வேண்டும். குறிப்பாக பழவகைகளில் நாவல் பழம் வைத்தால் மேலும் சிறப்பு.
அப்புறம் தாலி கயிறை இலையில் வைத்து வழிபாடுகள் செய்ய வேண்டும். காவிரி ஆற்றில் வழிபட முடியாது என்பதால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு,
அதில் 2 அல்லது 3 துளசி இலைகள், மஞ்சள் பொடி, ஏலக்காய், பச்சை கற்பூரம்,கலந்து காவேரி தாயாக பாவித்து வழிபடலாம். மேலும் தாலியை மாற்ற விரும்பாத தாய்மார்கள் வெறும் மஞ்சள் கயிறு வைத்து வழிபடலாம்.
Also Read: திருவண்ணாமலை ஆடி மாத பவுர்ணமி 2024: கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து உற்ற உறவினர்கள் வரவழைத்து காவிரி தாயை வழிபட்டு, ஒன்றாக சேர்ந்து விரதம் விட்டு உணவு அருந்தலாம்.
ஆடி பதினெட்டாம் நாள் வழிபாட்டை செய்பவர்களுக்கு தங்குதடையின்றி வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே நீங்களும் இந்த வழிபாட்டை செய்து பயனடையுங்கள் நண்பர்களே.