Home » செய்திகள் » தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு – மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அதிரடி சரிவு !

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு – மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அதிரடி சரிவு !

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு - மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அதிரடி சரிவு !

நடப்பு நிதியாண்டிற்கான 2024 – 25 மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டிற்கான 2024 – 25 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம், வேளாண்மை சார்ந்த திட்டங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் பீகார் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் மற்ற மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பல பொருட்களுக்கு வரி குறைப்பும் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறையை டீலில் விட்ட மத்திய அரசு – பட்ஜெட் தாக்கலில் ஒரு திட்டம் கூட இடம்பெறாதது ஏன்?

தற்போது 2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை ரூ.2080 குறைந்துள்ளது. அந்த வகையில் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதிக்கான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது.

இதனால் வரும் நாட்களில் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top