New Ration Card Holders: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு எப்போது விநியோகம்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது.
அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு ஏழைகளுக்காக கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் மற்றும் சலுகைகளும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு எப்போது விநியோகம்
இதனால் ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து புதிய ரேஷன் அட்டைக்கு பெரும்பாலான மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்குவதை அரசு நிறுத்தி வைத்திருந்தது.
இதனால் மாதம் மாதம் பெண்கள் வாங்கும் மகளிர் உரிமை தொகை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் புதிய ரேஷன் கார்டு கோரி இதுவரை 2 லட்சம் 81 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் 36 ஆயிரத்து 954 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் 26 ஆயிரத்து 502 முழு நேர ரேஷன் கடைகளும், 10 ஆயிரத்து 452 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகிறது.
எனவே தற்போது 2 லட்சம் 81 ஆயிரம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ள நிலையில், இப்பொழுது பரிசீலனை நடைபெற்று வருகிறது.
Also Read: நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து – 5 பேர் பலி – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
எனவே அடுத்த மாதம் முதல் புதிய அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அட்டைகளில் ஏதேனும் பிழைகள் இருந்தாலும்,
மாற்றம் செய்ய நினைத்தாலும் அல்லது புதிய அட்டை பெற விரும்பினாலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ration card in tamilnadu