காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - நீர்வளத்துறை தகவல் !காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - நீர்வளத்துறை தகவல் !

கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் உயர்வதால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணையானது தற்போது முழு கொள்ளவை எட்டியுள்ளது.

அந்த வகையில் அணையிலிருந்து எந்த நேரமும் 30,000 முதல் 50,000 கன அடி வரை நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு அணை திறக்கப்படும் பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவேரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் – தெற்கு ரயில்வே எச்சரிக்கை !

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தற்போது காவேரி ஆற்றில் 11,229 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் இது அதிகரிக்கும் என்பதால் கர்நாடகா அரசு சார்பில் காவேரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது . மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *