மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம் -  திமுக அதிரடி அறிவிப்பு!!மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம் -  திமுக அதிரடி அறிவிப்பு!!

Breaking News: மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம்: நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் சீட்டில் உட்கார்ந்தார். இதனை தொடர்ந்து அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

காலை 11 மணிக்கு தன்னுடைய உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 34 நிமிடங்களுக்கு பிறகு நிறைவு செய்தார். அதற்கிடையில் செல்போன், தங்கம் விலை குறைவு., பெண்களுக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன் வைத்தார். Budget 2024

மேலும் அவர் கூறிய திட்டங்கள் பெரும்பாலும் கார் மற்றும் ஆந்திராவிற்கு தான் சாதகமாக இருந்தது. தமிழ்நாடு குறித்து அவர் எந்தவொரு திட்டமும் கூறவில்லை.,ஏன் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட அவரிடமும் இருந்து வரவில்லை. அதுமட்டுமா உரையை தொடங்கும் முன் திருக்குறள் கூட சொல்லவில்லை. இதனால் பெரும் சர்ச்சையே கிளம்பியது. Central government

Also Read: தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி!!

இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் விதமாக திமுக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் நடந்த பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து வருகிற ஜூலை 27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுகவினர் தெரிவித்துள்ளனர்.  dmk party

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *