தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான நிலத்தை வழங்க மாநகராட்சி நிர்வாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.latest tamil news update
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கோவையில் கிரிக்கெட் மைதானம் :
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோயம்புத்தூரில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.coimbatore ondipudur international cricket stadium
அமைச்சர் உதயநிதி ஆய்வு :
தற்போது கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்க சுமார் 20 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒண்டிபுதுார், பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம் மற்றும் எல் என் டி பைபாஸ் அருகே உள்ள இடம், காந்திபுரம் மத்திய சிறை மைதானம் என நான்கு இடங்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து கோவைக்கு வந்த தமிழக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி – எப்போது கிளம்புகிறார் தெரியுமா?
20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு :
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக கோவை ஒண்டிப்புதூரில் உள்ள 20.72 ஏக்கர் நிலம் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. kovai international cricket stadium
அத்துடன் கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக 20.72 ஏக்கர் நிலத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நிலமாறுதல் செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.