பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.NEET Exam 2024
நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு :
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசிற்கு நோட்டீஸ் வழங்கியது. அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது.NEET Exam 2024 Revised Rank List Released
திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் :
தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை முதல் 100 இடங்களில் 10 பேர் தமிழக மாணவர்கள். அத்துடன் நீட் தரவரிசை பட்டியலில் 15 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
720 க்கு 720 மதிப்பெண் :
இதனை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலின் அடைப்படையில் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 61லிருந்து 17ஆக குறைந்துள்ளது.
ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து – அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !
89,198 தமிழக மாணவர்கள் தகுதி :
நீட் தேர்வில் 13,15,853 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதிகப்படியாக 1,65,015 மாணவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தகுதி பெற்றுள்ளனர். அத்துடன்
தமிழ்நாட்டை சேர்ந்த 89,198 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கேரளா – 86,713 மாணவர்கள்
கர்நாடகா – 88,887 மாணவர்கள்
மகாராஷ்டிரா – 1,42,829 மாணவர்கள்
ஆந்திரா – 43,788 மாணவர்கள்
தெலுங்கானா – 47, 356 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.latest tamil news today