நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் - ITR காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை அதிகாரிகள் விளக்கம்நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் - ITR காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை அதிகாரிகள் விளக்கம்

தற்போது நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.Income Tax Return

தற்போது 2023-24 ஆம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

அந்த வகையில் ஐந்து நாட்களே இருக்கின்ற நிலையில் ஏராளமானோர் வருமானவரி கணக்கினை தற்போது தாக்கல் செய்து வருகின்றனர்.

இருப்பினும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் அனைவரும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது என்பதை வருமான வரித்துறை மீண்டும் அறிவித்துள்ளது.

அத்துடன் வருமான வரியினை திரும்ப பெற்றுத் தருவதாக கூறி தற்போது பல்வேறு மோசடிகள் நடைபெற்ற வருவதாக சுட்டிக்காட்டி உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள்,

இதுபோன்ற மோசடிகளை யாரும் நம்ப வேண்டாம் என வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.Income Tax Return Filing for financial year 2023-24

நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு – 89,198 தமிழ்நாடு மாணவர்கள் தகுதி !

அந்த வகையில் வருமான வரி செலுத்த எந்த வித காலக்கெடுவும் நீட்டிக்கப்படாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளதை தொடர்ந்து,

ஆண்டு வருமானம் Rs.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு ITR தாக்கல் செய்தால் ரூ.5000 மும், ஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *