Home » செய்திகள் » மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம் – நூதனமான பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் – அதுவும் தமிழ்நாட்டுலயா?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம் – நூதனமான பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் – அதுவும் தமிழ்நாட்டுலயா?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம் - நூதனமான பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் - அதுவும் தமிழ்நாட்டுலயா?

Breaking News: மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்: இன்றைய நவீன உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கிறது. ஏன் சம்ரதாயங்கள், பாரம்பரியம் கூட மாறிவிட்டது. ஆனால் ஒரு கிராமத்தில் மட்டும் 150 ஆண்டுகளாக ஒரு பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். அப்படி என்ன பாரம்பரியம்  அதன் பின்னணி என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதாவது தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்கி வரும் சேலத்தில் இருக்கும் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தான் கருத்தராஜாபாளையம்.

இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பசுமை நிறைந்த அந்த கிராமத்தில் ஒரு மாடி வீடு கூட கண்ணில் தென்படவில்லை.

ஏன் அந்த கிராமத்தில் வாழும் பஞ்சத்தில் அடிபட்டவர்களா? அதனால் தான் மாடி வீடு கட்டாமல் இன்னும் ஓட்டு வீட்டுலயே வாழ்ந்து வருகிறார்களா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அப்படி எல்லாம் ஒன்று கிடையாது. அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும், ஆடு மாடு, கோழி என அனைத்தையும் வைத்து செழிப்பாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அப்புறம் ஏன் வீடு கட்டமா இருக்காங்க என்று மீண்டும் நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

Also Read: TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை – சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த கிரிக்கெட் வீரர்!

அதற்கான பின்னணி உண்மையை நான் சொல்கிறேன். அதாவது  கருத்தராஜாபாளையம் கிராமத்தில் வாழும் மக்கள் தெய்வத்தை தீவிரமாக வழிபடுவர்கள்.

கடவுளே தரையில் இருக்கும் பொழுது நாங்கள் மட்டும் மாடி வீடு கட்டி அதில் இருந்து எப்படி தெய்வத்தை பார்ப்பது என்று தான் அவர்கள் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் மாடி வீடு கட்டாமல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.

அதையும் மீறி மாடி வீடு கட்டினால் தெய்வ குத்தம் ஆகி விடும் என்றும், அதனால் ஆபத்து ஏற்படும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top