
Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் 2024: கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலை நகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கிறது.
மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்கிறார்கள். இப்படி இருக்கையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி வெளியேறியுள்ளது. indian team
பாரிஸ் ஒலிம்பிக் 2024
அதாவது 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் விளையாடிய 2 இந்திய அணிகளும் தோல்வி அடைந்தன. அதாவது அர்ஜுன் பபுதா மற்றும் ரமிதா ஜிண்டால் ஜோடி தகுதி சுற்றில் 6 வது இடத்தை பிடித்தது. அதே போல் சந்தீப் சிங் மற்றும் இளவேனில் வளரிவன் 12 வது இடத்தை பிடித்தனர். paris olympics 2024
Also Read: மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம் – நூதனமான பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் – அதுவும் தமிழ்நாட்டுலயா?
இதனால் இரு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இருந்தாலும் இதில் சந்தோஷமான செய்தி என்னவென்றால் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பான்வார் தகுதி சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கண்டிப்பாக அவர் இந்தியாவுக்காக பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 10m shooting game
நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை