Kollywood News: வித்தியாசமான அடைமொழி பெயர் கொண்ட தமிழ் சினிமா நடிகர்கள்: தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்கள் இருந்தாலும் கூட ஒரு சில நடிகர்களை நமக்கு அதிகமாக பிடித்து போகும். குறிப்பாக அவர்களின் பெயர்களும் கூட வித்தியாசமாக தான் இருக்கிறது. ஒரு சில நடிகர்கள் தாங்கள் நடித்த முதல் படத்தின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்து கொள்கிறார்கள்.
வித்தியாசமான அடைமொழி பெயர் கொண்ட தமிழ் சினிமா நடிகர்கள்
எடுத்துக்காட்டாக சொல்ல போனால் வெண்ணிற ஆடை மூர்த்தி, கயல் சந்திரன், கயல் ஆனந்தி, நான் கடவுள் ராஜேந்திரன் என சொல்லி கொண்டே போகலாம். அந்த பெயர் ராசியாக இருந்தனால என்னவோ தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய இடங்களில் இருந்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, இன்னொரு பக்கம் ஒரு சில படத்தின் மூலம் தங்களது பெயர்களுக்கு முன்னால் அடைமொழியை வைத்து கொள்கின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் உள்ள அடைமொழியுடன் பெயரை வைத்திருந்த நடிகர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
என்னத்த கண்ணையா:
இவர் சினிமாவில் நுழைந்த சமயத்தில் அவருடைய பெயர் ‘முதலாளி’ கண்ணையா என்று அறியப்பட்டது. இதையடுத்து “நான்” என்ற படத்தில் அவர் விரக்தியான மனநிலை கொண்டவராக நடித்திருந்தார். அந்த படத்தில் இருந்து தான் அவரை என்னத்த கண்ணையா என்று அழைக்கப்பட்டார்.
ஒருவிரல் கிருஷ்ணராவ்:
1965 ஆம் ஆண்டு வெளியான “ஒரு விரல்” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் கிருஷ்ண ராவ். அந்த படத்தில் இருந்து தான் அவரை ஒருவிரல் கிருஷ்ணராவ் என்று அழைக்கப்பட்டார்.
Also Read: பிரபல இயக்குனரை திருமணம் செய்த பிரிகிடா? யாரை தெரியுமா? அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!!
கல்லாப்பெட்டி சிங்காரம்:
பாக்யராஜ் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பேமஸ் ஆனவர் தான் கல்லாப்பெட்டி சிங்காரம்.
இவர் படத்தில் நடிப்பதற்கு முன்னர் கல்லாப்பெட்டி என்ற நாடக குழுவை வைத்து பலவேறு நாடகங்களை நடத்தி வந்தார். அதனால் தான் அவருக்கு கல்லாப்பெட்டி சிங்காரம் என்று அழைக்கப்பட்டார்.
இடிச்சபுலி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இடிச்சபுலி செல்வராஜ். அவருடைய தம்பி தான் பாண்டு.
வசந்த அழைப்புகள் படத்தில் இடிச்சபுலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் தான் அவருக்கு இடிச்சபுலி செல்வராஜ் என்று பெயர் வந்தது.
ஓமக்குச்சி நரசிம்மன்:
பழம்பெரும் நடிகரான ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்குள் வருவதற்கு முன்னர், நாடக இயக்குனர் தில்லைராஜனின், “நாரதரும் நான்கு திருடர்களும்” என்ற நாடகத்தில் நடித்து வந்தார்.
அந்த நாடகத்தில் யாமக்குச்சி என்ற பெயரை வைத்த இன்னும் சிரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று மாற்றினர்.