ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2024: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் சக்திவாய்ந்த கோவில் தான் ஆண்டாள் அம்மன் கோயில். இந்த கோவிலுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டாளை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் 08 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்கி வருகிறது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டாள் கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெகுவிமரிசையாக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி இந்த விழாவின் போது சிகர நிகழ்ச்சியாக ஆடிப்பூரம் அன்று தேரோட்டம் நடைபெறுவதும் வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா நாளை(ஜூலை 30ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2024
இந்த கொடியேற்றம் நாளை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறும். இதனை தொடர்ந்து நாள் தோறும் அம்மன் வீதி உலா வருகிறார். மேலும் நாளை இரவு 10 மணி அளவில் பதினாறு வண்டிச் சப்பர விழா நடைபெறும். இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி காலை 10 மணி முதல் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவை நடைபெற இருக்கிறது.
Also Read: ஆடி கிருத்திகை 2024: திருத்தணி கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து 5-ம் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன திருக்கோலமும் நடைபெறுகிறது.
மேலும் இந்த ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திருவிழா ஆகஸ்ட் 7ம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்த திருவிழாவின் இறுதி அத்தியாயம் வருகிற 10ம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூர திருவிழா நிறைவு பெறுகிறது.
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை
ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 !
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024