பிரியாணி மேன் யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி - பதறிப் போய் ஓடி வந்து தடுத்த தாய் - வீடியோ வைரல்!!பிரியாணி மேன் யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி - பதறிப் போய் ஓடி வந்து தடுத்த தாய் - வீடியோ வைரல்!!

Breaking News: பிரியாணி மேன் யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பிரபலம் அடைய வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞனும் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஹோட்டல் ஹோட்டலாக சென்று புட் ரிவியூ கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இர்பான்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் கூட அவருடைய மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தனக்கு இந்த குழந்தை தான் பிறக்க போகிறது என்பதை ஓப்பனாக கூறி சர்ச்சையில் சிக்கினார். இப்படி இருக்கையில் மீண்டும் இவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது இர்பானை போல் யூடியூபில் பேமஸான நபர் தான் பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் அபிஷேக். இவர் சமீபத்தில் இர்பான் குறித்து சர்ச்சைக்குரிய சில வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இர்பானும் வீடியோவை வெளியிட்டார். இப்படி தொடர்ந்து சமீப காலமாக அவர்களுக்குள் சண்டை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கையில் நேற்று அபிஷேக் யூடியூப் லைவில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதாவது என்னுடைய தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர்தான் என்று சொல்லி தூக்கிட முயன்றார்.

இதனை லைவில் பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து லைவ் பார்த்த சில உறவினர்கள்

பிரியாணி மேன் தாய்க்கு Call செய்து தகவல் கொடுத்தனர் உடனே தாய் தனது மகனை காப்பாற்றினார்.

தாய் பிரியாணி மேனை காப்பாற்றிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Also Read: தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள்: சௌந்தர்யா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்கள்!!

இது போன்று யாரும் தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். தற்கொலை எதற்கும் தீர்வு தராது.

எனவே உங்களுக்கு ஏதேனும்  மன அழுத்தம் ஏற்பட்டாலோ  அல்லது தற்கொலை எண்ணம் வந்தாலோ அதிலிருந்து வெளியே வர தமிழக அரசின் உதவி மையம் – 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *