தற்போது கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேரத்திற்கேற்ப இந்த மின்சார கட்டணமானது மாறும் என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஸ்மார்ட் மீட்டர் :
கேரள மாநிலத்தில் நேரத்திற்கேற்ப மாறும் மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் பகல் நேர மின்சார உபயோகத்திற்காக கட்டணத்தை குறைக்கவும், அத்துடன் இரவு நேர மின்சார கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பீக் ஹவர்களில் தேவையற்ற உபயோகம் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் – தமிழக அரசு தகவல் !
மின் கணக்கீடு :
இதனை தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் மூலம் நேரத்திற்கேற்ப மின்சார பயன்பாட்டை எளிதில் கணக்கிட முடியும் என்றும், அந்த வகையில் மாநிலத்தில் முதற்கட்டமாக 3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும் வீடுகளுக்கு இரண்டாம் கட்டமாக இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் திட்டம் அமலுக்கு வரும் என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.