சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்ட யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது செய்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பிரியாணி மேன் அபிஷேக் ரபி :
அபிஷேக் ரபி பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த வகையில் யூடியூபர்கள் எளிதாக பிரபலமடைவதற்காக ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் யூடியூபர்களை அவதூறாக பேசி வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட யூடியூபரின் ஆதரவாளர்களுடன் மோதிக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் பிரபல யூடியூபரான இர்ஃபானை தனது வீடியோவில் பிரியாணி மேன் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. இதற்க்கு முன்னர் கடந்த ஆண்டு இர்பானின் கார் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி ஒருவர் பலியானார்.
அந்த வகையில் விபத்து ஏற்படுத்திய காரை இர்பான் ஓட்டவில்லை என்றும் அவருடைய உறவினர் ஒருவர் தான் ஓட்டினார் என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து இர்பானின் மனைவி கர்ப்பமாக இருந்த போது இர்பான் துபாயில் தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை யூடியூபில் வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இர்பானின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் இந்த விஷயத்தையும், கார் விபத்து விஷயத்தையும் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் இதற்கு இர்பானும் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை முயற்சி :
இதனையடுத்து பிரியாணி மேனை பலர் விமர்சித்து வந்த நிலையில், அவர் யூடியூப்பில் லைவில் தற்கொலை செய்து கொள்வது போல் ஒரு வீடியோவை போட்டு தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் உடனடியாக சென்று காப்பாற்றியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது :
அந்த வகையில் 3 மணி நேரமாக லைவில் அவர் இது போல செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
அபிஷேக் ரபி மீது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.