அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்: ஒரு காலத்தில் மக்களுக்கு என்டேர்டைன்மெண்ட் ஆக இருந்து வந்தது சினிமா என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அப்போதெல்லாம் எந்த படம் வந்தாலும் மக்கள் தியேட்டருக்கு சென்று கண்டு கழித்தார்கள். ஆனால் இப்போவோ பெரிய பெரிய நடிகர் படத்தை மட்டும் தான் தியேட்டருக்கு செல்கிறார்கள்.
அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்
இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் கலைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி ஸ்மால் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தரமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படவில்லை. அப்படி என்னென்ன படங்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குரங்கு பொம்மை:
நித்திலன் சுவாமிநாதன் அறிமுக இயக்குனரால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் குரங்கு பொம்மை. இப்படத்தில் விதார்த் , டெல்னா டேவிஸ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தனர்.
தஞ்சாவூரில் உயர்ந்த சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை கடத்தி வரும் சம்பவத்தை மையமாக வைத்து கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் நித்திலன்.
அதிகமாக பேசப்பட்டிருக்க கூடிய இந்த திரைப்படம் எப்போது வெளியானது கூட யாருக்கும் தெரியவில்லை.
க்ரைம் திரில்லர் படங்கள் விரும்பி பார்க்கும் மக்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
இந்த படத்தின் இயக்குனர் தான் சமீபத்தில் வெளியான “மகாராஜா” என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை பூக்கள்:
கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படத்தை விவேக் இளங்கோவன் என்பவர் இயக்கி இருந்தார். ஒரு கொலையை யார் செய்தார் என்ற கண்ணேட்டத்தில் அடுத்தடுத்து காட்சிகள் திரில்லராக கொண்டு சென்றிருப்பார்.
இப்படத்தில் விவேக் லீடு ரோலில் நடித்திருப்பார். இதற்கு முன்னர் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் விவேக் நடித்ததில்லை. அந்த அளவுக்கு படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி இருந்தார். படத்தின் திரைக்கதையும் அல்டிமேட்டாக இருக்கும்.
எந்த ஒரு காட்சியிலும் விறுவிறுப்பு குறைந்தது இல்லை. ஆனால் இப்படி ஒரு படம் இருக்கிறதா என்றே யாருக்கும் தெரியவில்லை.
மெட்ரோ:
ஆனந்தகிருஷ்ணன் தயாரித்து இயக்கி இப்படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ஷிரிஷ் பாபி சிம்ஹா மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியில் நடக்கும் செயின் பறிப்பு, கொலை உள்ளிட்ட சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் எந்த வரவேற்பும் பெறவில்லை. ஆனால் படம் முழுக்க சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருப்பார் இயக்குனர்.
அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்காரும் வகையில் மர்மமான கதையை தான் இயக்குனர் கொடுத்திருப்பார். ஆனால் இப்படம் யாராலும் பேசப்படவில்லை என்பது தான் உண்மை.
குற்றமே தண்டனை:
மணிகண்டன். எம் இயக்கிய இந்த படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடித்திருந்தனர்.
கண்ணில் குறைபாடு உள்ள ஹீரோ அறுவை சிகிச்சை செய்வதற்காக என்னென்ன செய்கிறார் என்பதுதான் கதை.
கதைக்கு ஏற்ப திரைக்கதையை அமைந்திருப்பார் இயக்குனர். எந்த இடத்திலும் போர் அடிக்காமல் படத்தின் கதையை கொண்டு சென்றிருப்பார்.
ஆனால் இப்படம் வெளியான போதிலும் யாராலும் பாராட்டப்படவில்லை, யாராலும் பேசவும் படவில்லை என்பது தான் அசைக்கமுடியாத உண்மை.
இப்படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் சூப்பர் ஹிட் படமான காக்கா முட்டை படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் – அடக்கடவுளே இவரா இப்படி – ரசிகர்கள் ஷாக்!!
விடியும் முன்:
நடிகை பூஜா உமாசங்கர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விடியும் முன். இப்படத்தை பாலாஜி கே. குமார் என்பவர் இயக்கி இருந்தார். ஒரு இளம் பெண் பாலியல் தொழிலுக்குள் எப்படி நுழைகிறார், அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது படத்தின் கதைச்சுருக்கம்.
பூஜா நடித்த படங்களில் இப்படம் தான் Best என்று சொல்லலாம். இதுவும் ஒரு திரில்லர் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான். இப்படம் அந்த சமயம் ஹிட் கொடுத்திருக்க வேண்டியது. ஆனால் இப்படம் அதிகம் பேசப் படாததால் இப்படி ஒரு படம் இருக்கிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
பிரியாணி மேன் யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய 5 நடிகைகள்
கூலி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்!!