தற்போது விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் மதமாற்ற தடைச் சட்டம் பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத நிலையில் மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் :
மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதமாற்ற தடைச் சட்டம் கண்டித்து பேரணி :
கடந்த 2003ம் ஆண்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட இந்த கண்டன பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் ஆஜராகாத விசிக திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் – நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் !
வழக்கு ஒத்திவைப்பு :
அந்த வகையில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாத காரணத்தால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.