அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்? அடேங்கப்பா இத்தனை விஷயம் இருக்கா இதுல!!அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்? அடேங்கப்பா இத்தனை விஷயம் இருக்கா இதுல!!

அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக இந்த உலகத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் சரி பெண் குழந்தை பிறந்தாலும் சரி அரைஞாண் கயிறு கட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எதற்காக அரைஞாண் கயிறு கட்டுகிறார்கள்? இதனால் ஏதாவது நற்பயன் உண்டா என்று நீங்கள் கேட்பீர்கள்? அப்படி என்னென்ன நன்மைகள் நாம் அடைகிறோம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆதிகாலத்தில் மனிதர்கள் தன்னுடைய மானத்தை மறைக்க கோமணம் கட்டுவார்கள். அந்த கோமணமான துணியை நிறுத்துவதற்காக தான் கயிறு கட்டினார்கள். அந்த கயிறுக்கு தான்  ‘அரைஞாண் கயிறு’ என்று பெயர் வைத்தனர். இன்னும் தெளிவாக சொல்ல போனால்,  இடுப்பு எலும்புப் பகுதிக்கு ‘கூபக அறை’ என்று பழந்தமிழ் சொல்லில் பெயர் இருக்கிறது. அதில் இருந்து அறை எடுத்துக்கொண்டு வளைத்துக் கட்டுவது  ‘ஞாண்’ என்று பொருள் உண்டு அதனால் ‘அரைஞாண் கயிறு’ என்றும் பெயர் வைக்கப்பட்டது.

ஆண்கள் ஏன் கட்டாயமாக அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்றால், அப்போது தான் மேல் வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும். நாம் ஓடி ஆடி விளையாடுவது, வளைந்து நெளிந்து வேலை பார்க்கும் போது, விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே அதை தடுக்கவே அரைஞாண் கயிறு கட்ட வேண்டும். மேலும் இது கட்டுவதன் மூலம் சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி அறிவியல் ரீதியாக பார்ப்பவர்கள் சில இது அறிவியலுக்கு புறம்பானது என்று கூறுகின்றனர். ஆனால் உடல் உறுப்பை பாதுகாக்க அரைஞாண் கயிறு அவசியமாக பார்க்கப்பட்டது.

அரைஞாண் கயிறு அப்படி கட்டாமல் இருந்தால் என்ன ஆகும் என்று பார்த்தோம் என்றால், விரை வாதம், அண்டவாதம் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. எனவே இப்போது இருக்கும் இளைஞர்கள் அதை புரிந்து கொண்டு அரைஞாண் கயிறை கட்ட வேண்டும்.

Also Read: வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்? காலண்டர் யார் கண்டுபிடித்தது? இதுக்கு பின்னாடி இருக்கும் பின்னணி என்ன?

இப்போது உங்களுக்கு ஒரு டவுட் வரும். சிலர் கருப்பு, சிவப்பு என இரண்டு நிறங்களில் அரைஞாண் கயிறு கட்டி வருகிறார்கள் ஏன் என்று.

பண்டைய காலத்தில் மக்கள் 2 இனக் குழுக்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். எனவே தங்கள் அடையாளத்தை காட்டிக்கொள்ள கருப்பு மற்றும் சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களில் அணிந்தனர்.

நாளடைவில் தான் குலதெய்வத்துக்கு கட்டுபவர்கள் கருப்பு நிறத்திலும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் சிவப்பு கயிறும் கட்ட தொடங்கினர்.

மேலும் பணக்கார வீட்டை சேர்ந்த சிலர் அரைஞாண் கயிறை தங்கம் மற்றும் வெள்ளி கயிறை கட்டி வருகின்றனர்.

பொதுவாக வெள்ளி பயன்படுத்தினால் நம் உடலில் இருக்கும் சூட்டை தணிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனவே அரைஞாண் கயிறை வெள்ளியிலோ, நூலிலோ கட்டுவது நல்லது. பெண்களுக்கு அரைஞாண் கயிறு அவசியம் இல்லை.

ஏனென்றால் பெண்களுக்கு குடல் கீழறக்கம் பிரச்சனை ஏற்படுவது குறைவு. அதனால் பெண் குழந்தையாக இருக்கும் போது மட்டுமே அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *