தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் - 18 ஆயிரத்தை அள்ளி கொடுக்கும் அரசு - பெறுவது எப்படி?தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் - 18 ஆயிரத்தை அள்ளி கொடுக்கும் அரசு - பெறுவது எப்படி?

தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவைகளை மக்கள் இணையத்தில் பதிவு செய்ய புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் வாழும் அனைத்து தாய்மார்களும் கர்ப்பமாக இருக்கும் பொழுது தாய் சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பெற 12 இலக்கு தாய் சேய் நல அடையாள எண் (RCH ID).

அதாவது கர்ப்பபதிவு எண் வழங்கப்படும். கர்ப்பமான பெண்கள் 133XXXXXXXXX என தொடங்கும் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்ப பதிவு எண் (Reproductive and child health identification number RCH ID) PICME வெப்சைட் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் https://picme3.tn.gov.in/ என்ற இணையத்தில் சமர்ப்பித்து பெறலாம்.

தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்

தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?

  • கர்ப்பிணியின் ஆதார் அட்டை (50kb க்கும் குறைவாக உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்)
  • குடியிருப்பு ஆதாரம்(50kb க்கும் குறைவாக உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்)
  • மருத்துவரால் கர்ப்பத்தை உறுதி செய்ய (சிறுநீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட்) மருத்துவமனையில் எடுத்து மருத்துவரின் முத்திரையுடன் கையொப்பமிட்ட அறிக்கையை(50kb க்கும் குறைவாக உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்)

எனவே மதுரை பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மேற்கண்ட ஆவணங்களை கொண்டு பி.ஐ.சி.எம்.இ(PICME) என்ற இணையத்தில் தாங்களே பதிவு செய்து கர்ப்ப பதிவெண், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் மகப்பேறு பெறுவதற்கு பயன்படுத்தலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பெறுவது எப்படி?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நீங்கள் வேண்டுமென்றால் கருத்தரித்த 12 வாரத்திற்குள் பதிவு செய்திருக்க வேண்டும். tamilnadu pregnancy scheme

அதாவது ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் சென்று கர்ப்பிணியின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து தங்கள் பெயரை பதிவு செய்து பிக்மி எண் பெற வேண்டும். இதையடுத்து பதிவு செய்த கர்ப்பிணி பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். இதனை தொடர்ந்து கர்ப்பிணியின் 4-வது மாதத்திற்கு பிறகு, 2வது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்.

Also Read: வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்? காலண்டர் யார் கண்டுபிடித்தது? இதுக்கு பின்னாடி இருக்கும் பின்னணி என்ன?

அதன்பின்னர் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு, மூன்றாவது தவணையாக ரூ.4,000 வழங்கப்படும். இதையடுத்து பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலம் சமயத்தில் நான்காவது தவணையாக ரூ.4,000 வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து பிறந்த குழந்தைக்கு 9வது மாதம் முடிந்தவுடன் 5 வது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.14,000 ரொக்கம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். அதுமட்டுமின்றி  ரூ.2,000 மதிப்புள்ள பெட்டகங்கள் அரசு சார்பில் இரண்டு முறை வழங்கப்படும். எனவே மொத்தம் 18 ஆயிரம் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்டு வருகிறது. dr muthulakshmi reddy scheme 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *