Breaking News: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய பதிரனா: சமீபத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் உள்ள ஆர்பிஎஸ்சி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பயிற்சியின் போது பதிரனா கேட்ச் பிடிக்க டைவிங் அடிக்கும் போது அவருக்கு தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டுள்ளது. india vs Sri Lanka
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய பதிரனா
இதனால் தான் கடந்த செவ்வாய் கிழமை நடந்த 3வது போட்டியில் பதிரனா பந்துவீசவில்லை.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த வீரர்களுக்கு பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். cricket news in tamil
Also Read: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !
மேலும் பிரமோத் மதுஷன், ஜெப்ரி வான்டர்சே மற்றும் குசல் ஜனித் ஆகியோர் அணியில் காத்திருப்பு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பதிரனா பந்து வீச்சை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
CSK அணியில் தோனியுடன் சேர்ந்து விளையாடிய இவர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Sri Lanka palyer pathirana
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை
தமிழகத்தில் இது தான் முதல் முறை