தற்போது இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக மீனவர்கள் :
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, பறிமுதல் செய்து அல்லது அரசுடைமையாக்குவது போன்ற செயல்களில் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை நடவடிக்கை :
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று (31.07.2024) காலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர்.
அந்த வகையில் நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான கார்த்திகேயன் என்பவரது விசைப் படகின் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து அந்த படகில் இருந்த ராமச்சந்திரன், மூக்கையா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலுக்குள் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம் – மீட்பு பணியில் ஈடுபட்ட இறங்கியவரும் உயிரிழப்பு!!
நிதியுதவி அறிவிப்பு :
இந்நிலையில் இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த தமிழக மீனவரான மலைச்சாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.