தற்போது நடப்பு நிதியாண்டில் 2024 ஜூலை மாதத்தில்1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த வசூலை விட 10.3% உயர்ந்துள்ளது.
2024 ஜூலை மாதத்தில்1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் :
மத்திய அரசின் தகவலின் படி ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது 10.3 சதவீதம் உயர்ந்து தற்போது ரூ.1.82 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
அந்த வகையில் முக்கியமாக சரக்குகள் மற்றும் சேவைகளில் உள்நாட்டு பரிவர்த்தனைகளால் உயர்ந்ததாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
10.2 சதவீதம் உயர்வு :
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 1, 2017 அன்று முதல் மறைமுக வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட மூன்றாவது அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் இதுவாகும்.
டேட்டாகளின் படி ஜூலை மாதத்தில் மொத்த ரீபண்ட் தொகை ரூ.16,283 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ரீபண்ட்களை முறை செய்த பிறகு நிகர சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக இருந்தது, இது 14.4 சதவீத வளர்ச்சியாக கருதப்படுகிறது.
மேலும் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ 182,075 கோடியாக இருந்தது, அதில் மத்திய ஜிஎஸ்டி ரூ 32,386 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ 40,289 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ 96,447 கோடியாகும். அத்துடன் இழப்பீடு செஸ் தொகை ரூ.12,953 கோடி.
கலைஞரின் 6வது நினைவு நாள் – முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு – படையெடுக்கும் திமுகவினர்!!
மூன்றாவது அதிகபட்ச வசூல் :
அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 2024ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது,
இது முந்தைய ஏப்ரல் 2023 இல் அதிகபட்சம் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ஜூலை 2024 இல் ரூ.1.82 லட்சம் கோடி வசூலானது,
இதுவரை இல்லாத அளவிற்கு பதிவு செய்யப்பட்ட மூன்றாவது அதிகபட்ச வசூலாகும்.
மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவரை (ஏப்ரல்-ஜூலை) வசூல் 10.3 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.7.39 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.