Marudhamalai Murugan Temple: மருதமலை முருகன் கோவிலுக்கு போகிறீர்களா: கோவை மாவட்டம் மருதமலை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இடம் பெற்றுள்ள பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் தான் தமிழ்க் கடவுள் முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்க கோவிலாகும். இக்கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஆடிப்பெருக்கு, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் மருதமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மருதமலை முருகன் கோவிலுக்கு போகிறீர்களா
அதாவது ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை மற்றும் ஆகஸ்ட் 4 ல் மருதமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனம், படி வழியாக மருதமலை கோவிலுக்கு செல்லலாம். murugan kovil
Also Read: ஆடி கிருத்திகை 2024: திருத்தணி கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
அதுமட்டுமின்றி கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் மூலம் செல்லலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் நாளை 4 சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். கடந்த சில மாதங்களாக கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப் பாதை மற்றும் படிக்கட்டு பாதையில் யானைகள் கடந்து செல்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை
ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 !
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024