தற்போது விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விண்வெளி மையம் :
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக்காக இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த அமெரிக்காவை சேர்ந்த ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளி வீரர் தேர்வு :
இதனை தொடர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்யும் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட விமானப்படை விமானிகள் குழுவில் இருந்து இளம் வீரரான குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு – அதிகமான உறுப்பினர்களின் ஆதரவை பெற்றதாக தகவல் !
அந்த வகையில் இவர் விண்வெளிப் பயணம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், இவருக்கு மாற்று வீரராக அனுப்ப குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்கான பயிற்சியை இந்த வாரம் முதல் தொடங்குகின்றனர்.