என்ன நண்பா ரெடியா - கோட் படத்தின் 3வது பாடல் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!என்ன நண்பா ரெடியா - கோட் படத்தின் 3வது பாடல் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

kollywood news: என்ன நண்பா ரெடியா – கோட் படத்தின் 3வது பாடல் வெளியீடு: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபு தேவா, சினேகா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அண்மையில் விஜய் தனது குரலில் பாடிய விசில் போடு சாங் மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: சுபம் போட போகும் ஜீ தமிழ் முக்கிய சீரியல் – விறுவிறுப்பான கிளைமேக்ஸ் இதோ! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடித்த கோட் படத்தின் 3வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜாவும்,  வ்ருக்ஷா பாலு ஆகியோர் பாடியுள்ளனர்.

மேலும் இந்த பாடலை வெங்கட் பிரபு தந்தையும் பிரபல இயக்குனருமான கங்கை அமரன் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *