முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் 156 பேர் மட்டும் பேசும் மொழி தெரியுமா ? அந்த வகையில் இந்த மொழியை மிகக்குறைவான நபர்கள் மட்டுமே பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 156 பேர் மட்டும் பேசும் மொழி தெரியுமா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்தியா :
இந்தியா ஒரு துணைக்கண்டமாகும், அந்த வகையில் பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பின்பற்றக்கூடிய மக்களை கொண்ட பன்முகத்தன்மை உடையது. இதன் அடிப்படையில் நிர்வாக வசதிக்காக மொழிகளை மையமாகக்கொண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தற்போது அரசாங்கத்தால் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளும் உள்ளன. அதே சமயம் அங்கீகரிக்கப்படாத மொழிகளும் தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 156 பேர் மட்டுமே பேசும் மொழி :
தமிழகத்தில் சௌராஷ்டிரா மொழியை 2,38,556 பேரும், படுக மொழியை 1,32,102 மக்களும் பேசுகின்றனர். இதனை தொடர்ந்து மணிப்பூரி, திபெத்தின், லுசாய் அல்லது மிசோ, தடோ, போடோ, திமாஷா போன்ற 6 திபெத்தே மற்றும் பர்மிய மொழிகளை 1972 பேர் தமிழகத்தில் பேசி வருகின்றனர். இவற்றில் மணிப்பூரி, போடோ மட்டுமே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகும்.
நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !
சந்தாலி மொழி :
அந்த வகையில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் சுமார் ஆறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி தான் சந்தாலி, மேலும் ஹோ மற்றும் முண்டாரியுடன் தொடர்புடைய ஆஸ்ட்ரோ-ஆசியாவின் சந்தாலி துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும்.
தமிழ்நாட்டில் இந்த சந்தாலி மொழியை மிகக் குறைவான நபர்களே பேசி வருகின்றனர். அந்த வகையில் 156 நபர்கள் மட்டுமே பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன்
புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு
சென்னை தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணி
இரண்டு லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்