Home » செய்திகள் » புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

Breaking News: புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு: புதுச்சேரியில் தற்போது பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ரங்கசாமி  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யப்பட்டு விரைவில் புதிய அரசாணையை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக புதுச்சேரியில் குரூப் B காலியிடங்கள் MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசனையும் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து குரூப் B பணியிடங்களில் SI, விவசாய அதிகாரி உள்ளிட்ட 9 துறைகளில் காலியாக உள்ள 138 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இதில் OBC பிரிவினருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் MBCக்கு பிரிவினருக்கு உரிய இட  ஒதுக்கீடு வழங்க வில்லை என்பதால் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர்.

Also Read: பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு.. அரசு அதிரடி அறிவிப்பு – உடனே முந்துங்கள்!!

இதன் அடிப்படையில் குரூப் B காலி பணியிடங்களில் MBC பிரிவினரை நிரப்ப உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதன்படி OBC பிரிவினருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top