நாஞ்சில் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டாரு - ஒரே வருஷத்துல மனைவி பரபரப்பு புகார்!நாஞ்சில் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டாரு - ஒரே வருஷத்துல மனைவி பரபரப்பு புகார்!

vijay tv: நாஞ்சில் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டாரு: விஜய் டிவியின் முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்று பிரபலமானவர். இவர் பல நிகழ்ச்சிகளில் பெண் வேடம் அணிந்து மக்களிடையே அதிகம் பேசப்பட்டார்.

அதுமட்டுமின்றி அவ்வப்போது சில  சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். ஏன் இதனால் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டது. மேலும் இவர் சில சீரியல்களிலும் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நாஞ்சில் விஜயனும் மரியாவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் மரியா பேசும் போது, ”  நாஞ்சில் என்னை ஏமாற்றி தான் திருமணம் செய்துகொண்டார்.

Also Read: பிரஷாந்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா? அடேங்கப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே – அழகிய போட்டோ உள்ளே!

அவர் என்னை பொண்ணு பார்க்க வரும் பொழுது, அவரது தலை கருமை நிறத்தில் இருந்தது. அப்போது அவர் வயசு கூட சொல்லவில்லை. ஆனால் அவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும், திருமணத்திற்கு பின் அவரது சாயம் வெளுத்தது, தலை பூரா வெள்ளை முடி தான் என்று தனது கணவர் குறித்து நகைச்சுவையாக கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *